உத்தனபள்ளி அருகே வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது

உத்தனபள்ளி அருகே முன் விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தனபள்ளி அருகே வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது
Published on

வேப்பனஅள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, உத்தனபள்ளி அருகே உள்ள தேன் துருகம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ருணப்பா மகன் அருண்குமார் (வயது25). அதே பகுதியை சேர்ந்த மற்றொரு அருண்குமார் (27). இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.  

இந்த நிலையில் நேற்று காலை இருவருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதனை அருண்குமார் நண்பர் மகேஷ் தட்டி கேட்டார். அப்போது திடீர் என கிருஷ்ணப்பா மகன் அருண்குமார் அவர் நண்பர்கள் சிவப்பா, மாதேவப்பா, தருன்குமார், அருண்குமார் ஆகிய 4 பேர் சேர்ந்து மகேஷை சரமாரி தாக்கி மறைத்து வைத்து இருந்த கத்தியால் மகேஷ் கால், தொடை பகுதியில் குத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஒடினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த மகேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து  உத்தனபள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பியோடிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com