காஷ்மீர்: ஆஸ்பத்திரியில் இருந்து லஷ்கர் தீவிரவாதி தப்பிய வழக்கில் 4 பேர் கைது

ஜம்மு காஷ்மீரில் இரு போலீசாரை கொன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பாகிஸ்தான் தீவிரவாதியை தப்பவைத்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர்: ஆஸ்பத்திரியில் இருந்து லஷ்கர் தீவிரவாதி தப்பிய வழக்கில் 4 பேர் கைது
Published on

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீமகாராஜ் ஹரி சிங் ஆஸ்பத்திரியில் பாகிஸ்தான் கைதி நவீத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக போலீசார் கடந்த 6-ம் தேதி அழைத்து வந்தனர்.

அப்போது ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் சிலர், போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கைதியை தீவிரவாதிகள் மீட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தீவிரவாதிகள் தாக்குதலில் 2 போலீசார் பலியாகினர்.

இந்த தாக்குதலில் லஷ்கர் இ தாய்பா அமைப்பு ஈடுபட்டுள்ளதும், தப்பி ஓடிய தீவிரவாதி அந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் பின்னர் தெரியவந்தது. இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய நால்வர் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நவீத்தை தப்ப வைக்க நடந்த சம்பவத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது இந்த நால்வர் என்றும் அம்மாநில போலீசார் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com