3-வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் சதத்தால் இங்கிலாந்து 353 ரன்கள் குவிப்பு

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக சதம் அடிக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்கள் குவித்துள்ளது.
3-வது டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் சதத்தால் இங்கிலாந்து 353 ரன்கள் குவிப்பு
Published on

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அலஸ்டைர் குக் மேலும் 6 ரன்கள் எடுத்து 88 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக பேர்ஸ்டோவ் 36 ரன்னும், மொயீன் அலி 16 ரன்னும், ரோலண்ட்-ஜோன்ஸ் 25 ரன்னும் எடுத்தனர்.

9-வது விக்கெட்டாக பிராட் 3 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், பென் ஸ்டோக்ஸ் மகாராஜ் ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்து சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், 112 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து 353 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் 153 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com