3வது டி20 போட்டியில் தென்ஆப்ரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. #INDvSA #SAvIND #3rdT20
3வது டி20 போட்டியில் தென்ஆப்ரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
Published on

ஜொகன்னஸ்பர்க்:

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் 2 மாத கால தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அங்கு டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது.

இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் இன்றிரவு (சனிக்கிழமை) நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி கேப்டன் டுமினி பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஹாலுக்கு பதிலாக அக்ஸார் பட்டேலுக்கும், உனத்கட்டுக்கு பதிலாக பும்ராவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்ரிக்கா அணியில் ஸ்மட்ஸ், டேன் பாட்டர்சன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கிறிஸ்டியன் ஜான்கெர், ஆரோன் பங்கிசோ ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, எம்.எஸ். டோனி, ஹர்திக் பாண்டியா, அக்ஸார் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா.

தென்ஆப்ரிக்கா அணி: ரீசா ஹென்றிக்ஸ், டேவிட் மில்லர், ஜீன்-பால் டுமினி (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், பர்ரான் பெஹார்தின், கிறிஸ்டியன் ஜான்கெர், ஆண்டில் பெலுக்வாயோ, ஆரோன் பங்கிசோ, கிறிஸ் மோரிஸ், ஜூனியர் தலா, தப்ரியஸ் ஷாம்ஸி. 

இந்திய நேரப்படி சரியாக 9 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. #INDvSA #SAvIND #3rdT20

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com