3 ஊராட்சி செயலாளர் பதவிக்கான காலி இடங்களுக்கு 395 பேர் விண்ணப்பம்

மன்னார்குடியில் 3 ஊராட்சி செயலாளர் பதவிக்கான காலி இடத்திற்கு 395 பேர் விண்ணப்பங்கள் வழங்கி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊராட்சி செயலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வந்த இளைஞர்கள், பெண்கள்
ஊராட்சி செயலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வந்த இளைஞர்கள், பெண்கள்
Published on

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளில் காரிக்கோட்டை, 54 நெம்மேலி, வேட்டைதிடல் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பதவிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நேற்று பெறப்பட்டது.

அதன்படி மன்னார்குடி அருகே காரிக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று விண்ணப்ப படிவங்களை வழங்கினர். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணகி, ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், ஊராட்சிமன்ற துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காரிக்கோட்டை ஊராட்சியில் 160 பேர், வேட்டை திடல் ஊராட்சியில் 165 பேர், 54 - நெம்மேலி ஊராட்சியில் 70 பேர் என மூன்று ஊராட்சிகளில் உள்ள 3 பணியிடங்களுக்கு மொத்தம் 395 பேர் விண்ணப்பங்கள் வழங்கி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com