389 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி- அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்

கோவில்பட்டி-வில்லிசேரி பள்ளிகளில் 389 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கி பேசினார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல் நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார். கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு 230 மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார். 

நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயபாண்டி யன், ஊராட்சி செயலாளர் ரமேஷ், மணியாச்சி கூட்டுறவு வங்கி தலைவர் மகேஷ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் வேலுமணி, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினவேல், பாண்டவர்மங்களம் கூட்டுறவு வங்கி தலைவர் அன்புராஜ், வினோபாஜீ, வெள்ளதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வில்லிசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு 159 மாணவ- மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com