திரிபுராவில் 38 சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்

திரிபுராவில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட 38 சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரவர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல்
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல்
Published on

அகர்தலா:

திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் கடந்த 15-ந் தேதி, மாநில சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஒரு அதிகாரிக்கு நேற்று முன்தினம் இரவு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அதே கூட்டத்தில் கலந்து கொண்ட 38 சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரவர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இவர்களில், 4 டாக்டர்களும் அடங்குவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com