அறந்தாங்கி பகுதியில் 3500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அறந்தாங்கி பகுதியில் நகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 63 கடைகளில் இருந்த 3500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அறந்தாங்கி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்.
அறந்தாங்கி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்.
Published on

அறந்தாங்கி:

அறந்தாங்கி நகரில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை சிலர் பயன்படுத்துவதாக அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் நகராட்சி ஆணையர் வினோத் உத்தரவின் பேரில் துப்புரவு அலுவலர் முத்துகணேஷ் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் சேகர், மேலாளர் சுரேஷ் மேற்பார்வையில் 60 பேர் கொண்ட 6 குழுக்கள் நகர் முழுவதும் உள்ள 3665 கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். 

அப்போது 63 கடைகளில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 3500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்த 63 கடைக்காரர்களிடம் ரூ. 84 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். 

கடையை திறந்து ஆய்வு செய்ய ஒத்துழைக்க மறுத்த பாலமுருகன் என்பவரது கடையை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com