இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டம் - சாலை விபத்தில் 30 பேர் பரிதாப பலி

இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற சாலை விபத்துக்களில் 30 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #SrilankaAccidents
இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டம் - சாலை விபத்தில் 30 பேர் பரிதாப பலி
Published on

கொழும்பு:

இலங்கையில் கடந்த 14-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்நாட்டு அரசு உள்ளூர் விடுமுறை விட்டது.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துக்களில் 30 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர். குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக சுமார் ஆயிரத்து 270 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 34 ஆயிரம் வாகன ஓட்டுனர்கள் மீது சாலை விதிகளை மீறியதாக புகார் பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதேபோல், கொழும்பு தேசிய மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற பல்வேறுரு சாலை விபத்துக்களில் இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர் என்றும், சுமார் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். #SrilankaAccidents

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com