கென்யா: லாரியுடன் பஸ் நேருக்குநேர் மோதல் - 30 பேர் பலி

கென்யா நாட்டின் மத்திய பகுதியில் இன்று எதிர் திசையில் வந்த லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கென்யா: லாரியுடன் பஸ் நேருக்குநேர் மோதல் - 30 பேர் பலி
Published on

நைரோபி:  

கிழக்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மோசமான சாலைகள் மற்றும் சரியான பராமரிப்பு இல்லாத வாகனங்களால் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் சுமார் 3 ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், கென்யாவின் மேற்கு பகுதியில் இள்ள புசியா நகரில் இருந்து சென்ற பஸ் இன்று அதிகாலை நாகுரு-எல்டோரெட் நெடுஞ்சாலை வழியாக வந்தபோது எதிர்திசையில் நாகுரு நகரில் இருந்து வேகமாக வந்த லாரி பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் இரு வாகனங்களின் டிரைவர்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com