கேரளா அருகே தங்கும் விடுதியில் சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர் கைது

கேரளா அருகே தங்கும் விடுதியில் சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மூணாறு:

கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கேரள மாநிலம் கோழிக்கோடு கக்கடாம்பொய்யில் என்ற பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் சிறுமியை ஏமாற்றி அழைத்து வந்து பலாத்காரம் செய்தனர்.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சிறுமியை பலாத்காரம் செய்ததாக மலப்புரம் பூக்கோட்டூர் பகுதியைச் சேர்ந்த மன்சூர் (வயது 28), நிசார்பாபு, (38) மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர் முகமது பஷீர் (50) ஆகியோரை கைது செய்தனர்.

சிக்மங்களூர் பகுதியில் இருந்து கேரளாவுக்கு சிறுமியை அழைத்து வந்த ஹர்சானா (25) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து டி.எஸ்.பி. ஹரிதாசன் விசாரணை நடத்தியதில் வயநாடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் சிறுமிகளை வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்து வந்து பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. எனவே இதில் தொடர்புடைய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com