வி‌ஷவாயு வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் இறந்த தொழிற்சாலைக்கு சீல்

ஆம்பூரில் வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான தோல் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வி‌ஷவாயு வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் இறந்த தொழிற்சாலைக்கு சீல்
Published on

ஆம்பூர் அருகே பெரிய வரிகம் கிராமத்தில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் செல்வம் (வயது 25), கோதண்டன் (31), ரங்கநாதன் (46) ஆகிய 3 பேரும் வி‌ஷவாயு தாக்கி இறந்தனர்.

3 தொழிலாளர்கள் சாவுக்கு காரணமான அந்த தோல் தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடியாக இன்று சோதனை நடத்தினர். அதில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய போதிய உபகரணங்களை பயன்படுத்தாமல் விதிகளை மீறியது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com