சின்னசேலம் அருகே 3 கடைகளில் திருடிய கொள்ளையன் கைது

சின்னசேலம் அருகே 3 கடைகளில் திருடிய கொள்ளையனை போலீசார் வாகன சோதனையில் கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சின்னசேலம் அருகே 3 கடைகளில் திருடிய கொள்ளையன் கைது
Published on

சின்னசேலம்:

சின்னசேலம் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்திலி பஸ் நிறுத்தம் அருகே தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம மனிதன் அங்கிருந்த 3 கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்தான். பின்னர் அவன் அங்கிருந்த ரூ.62 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டான்.

இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பி ரண்டு வீமராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் கொள்ளையனை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சின்னசேலம் போலீசார் கனியாமூர் பகுதியில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினான்.

இதைத்தொடர்ந்து போலீசார் சின்னசேலம் போலீஸ் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் சின்னசேலம் அருகே உள்ள தென்செட்டிஏந்தல் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 19) என்பது தெரியவந்தது.

மேலும் இவன் இந்திலியில் உள்ள வணிக வளாகத்தில் 3 கடைகளில் பணம் திருடியதையும் ஒப்புக் கொண்டான். மேலும் திருடிய பணத்தை கனியமூர் பகுதியில் புதரில் மறைத்து வைத்திருப்பதாகவும் கூறினான்.

இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயன், சப்-இன்ஸ்பெக் டர்கள் சண்முகம், சங்கர சுப்பிரமணியம் ஆகியோர் வெங்கடேசனை அழைத்து சென்று புதரில் ஒரு பையில் மறைத்து வைத்திருந்த ரூ.42 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் இவன் மீது நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஒரு டாஸ்மாக் கடையில் பணம் கொள்ளையடித்த வழக்கும் உள்ளது. தொடர்ந்து அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com