அபிராமபுரம் கூவம் பகுதியில் 3 மணல் லாரிகள் சிக்கியது

சென்னை, கிரீன்வேஸ் சாலையை ஒட்டியுள்ள கூவம் கரையோரம் பகுதிகளில் மணல் அள்ளி 3 லாரிகளை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை:

சென்னை, கிரீன்வேஸ் சாலையை ஒட்டியுள்ள கூவம் கரையோரம் பகுதிகளில் லாரியில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக அபிராமபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மணலுடன் நின்ற 3 லாரிகளை பிடித்தனர்.

லாரியில் ‘பொதுப்பணித்துறை’ என்று ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இங்கு மணல் அள்ள அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com