இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு : 3 விஞ்ஞானிகள் பகிர்வு

சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வு மேற்கொண்ட 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ்
விஞ்ஞானிகள் ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ்
Published on

ஸ்டாக்ஹோம்:

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், 2019-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி கனடாவை சேர்ந்த ஜேம்ஸ் பீப்ள்ஸ், சுவிட்சர்லாந்தை சேர்ந்த மைக்கேல் மேயர் மற்றும் திதியர் க்யூலோஸ் ஆகிய விஞ்ஞானிகள் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வு மேற்கொண்ட இந்த 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com