கிறிஸ்தவ ஆலயத்தில் வீசப்பட்ட 3 மாத குழந்தை மீட்பு

கேளம்பாக்கம் கிறிஸ்தவ ஆலயத்தில் வீசப்பட்ட 3 மாத குழந்தையை மீட்ட போலீசார் செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட குழந்தை
மீட்கப்பட்ட குழந்தை
Published on

திருப்போரூர்:

கேளம்பாக்கம், கோவளம் சாலையில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. ஆலய வாசலில் பிறந்து 3 மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. மர்ம நபர்கள் குழந்தையை வீசி சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுபற்றி கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர்.

தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய இயக்குனர் தேவன்பு, ஒருங்கிணைப்பாளர் ஹென்றி, உறுப்பினர் ஆலிஸ் அற்புதம் ஆகியோர் குழந்தையை பெற்றுக் கொண்டனர்.

பின்னர் இந்த குழந்தை செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பிறந்து 3 மாதங்களே ஆன ஆண் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யார்? எதற்காக விட்டு சென்றனர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com