ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவம் அதிரடி

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
சண்டை நடந்த பகுதி
சண்டை நடந்த பகுதி
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம், பசல்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் இன்று காலையில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்ட மூவரும் உள்ளூரைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என தெரியவந்துள்ளது. அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு பின்னர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com