ஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்றாவது பயங்கரவாதி உடல் சிக்கியது

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #MilitantstAttack #SecutiryForceEncounter
ஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்றாவது பயங்கரவாதி உடல் சிக்கியது
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட ஹயுனா டிரால் என்ற பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது. 

இந்நிலையில், அதே பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்றாவது பயங்கரவாதி உடல் சிக்கியது. இதையடுத்து, பாதுகாப்பு படையினருடனான என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கை 3 ஆனது. இத்துடன் அங்கு துப்பாக்கி சண்டை முடிவடைந்தது. விசாரணையில் அவர்கள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #Kashmir #Kashmirencounter #Pulwamaencounter #Terrorists killed

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com