

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாந்திபோரா மாவட்டத்தில் இன்று பனிச்சரிவு ஏற்பட்டது. பாக்தோர் பகுதியில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் எல்லை கோட்டுப்பகுதியில் உள்ள ராணுவ முகாம் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த 3 ராணுவ வீரர்கள் பனியில் சிக்கி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பாக்தோர் பகுதியில் 5 அடி உயரத்திற்கு பனி உறைந்து காணப்படுகிறது.