திருவண்ணாமலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் கட்டுமான பணியின் போது, சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
திருவண்ணாமலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் பலி
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவூடல் தெருவில் தனியார் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று காலை கட்டுமான பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சுவரை இடிக்கும் பணி நடந்தது. அப்போது அந்த சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 

தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கிய ரமேஷ், அலமேலு, லட்சுமணன் ஆகியோரது உடல்களை மீட்டனர்.

மேலும், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இருவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com