சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி

சாத்தான்குளம் அருகே 3 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அமராவதி குளத்தில் மாடுகள் மேய்வது வழக்கம். அதுபோல் நேற்று வழக்கம் போல மாடுகள் அங்கு மேய்ந்து விட்டு, குளத்தில் தண்ணீர் குடித்து கொண்டிருந்தன. அப்போது மின்சார ஒயர் அறுந்து விழுந்தது. இதில் 3 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன.

இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் மணி, வாசுகி, செல்வி ஆகியோர் போலீசில் புகார் செய்தனர். மேலும் சம்பவ இடத்தை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்யராஜ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com