

கன்னியாகுமரி:
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்ட 3 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 3 பேரும் மதுபோதையில் இருந்ததும், அவர்கள் சென்னையை சேர்ந்த ஆகாஷ் (வயது 20), கிருஷ்ணன் (21), ஹாரிஸ் (19) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்ற தகவலும் வெளியானது. அதாவது, சென்னையில் 3 பேரும் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளதாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது கன்னியாகுமரியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் மதுபாரில் பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டனர்.