

சென்னை:
சட்டசபையில் இன்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத் திருத்த முன் வடிவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக சட்டத் திருத்த முன் வடிவை அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்தார்.
தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த முன் வடிவை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தாக்கல் செய்தார்.
பல்கலைக்கழக சட்டத்தில் தேர்வு குழு உறுப்பினர்களுக்கும், துணை வேந்தருக்கும் தகுதி எதுவும் வகுக்கப்படவில்லை. மேலும் துணை வேந்தராக நியமிக்க அதற்கான பெயர் பட்டியலை தயாரிக்கவும், தேர்வு குழுவால் வேந்தருக்கு பரிந்துரை செய்ய கால நிர்ணயம் செய்யப்படாமல் உள்ளது. எனவே இதை திருத்தும் வகையில் பல்கலைகழக சட்டத்தை தகுந்த முறையில் திருத்த அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.