2-வது டி20 போட்டி: ஜிம்பாப்வேவை எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

ராவல்பிண்டியில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஹைதர் அலி
ஹைதர் அலி
Published on

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியால் 134 ரன்களே அடிக்க முடிந்தது. ரியான் பர்ல் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 22 பந்தில் 32 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிஸ் ரஃப், உஸ்மான் காதிர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் பஹர் ஜமான் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து கேப்டன் பாபர் அசாம் உடன் ஹைதர் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினர்.

பாபர் அசாம் 28 பந்தில் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹைதர் அலி ஆட்டமிழக்காமல் 43 பந்தில் 66 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் 15.1 ஓவரிலேயே 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 137 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஏற்கனவே முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்ததால் பாகிஸ்தான் 2-0 எனத் தொடரை கைப்பற்ற முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com