2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவின் வெற்றிக்கு 237 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை

பல்லேகலேயில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 237 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை.
2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவின் வெற்றிக்கு 237 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை
Published on

அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இலங்கை அணி 7.4 ஓவரில் 41 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. டிக்வெல்லா 24 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் பும்ப்ரா பந்தில் ஆட்டம் இழந்தார்.


அரைசதம் அடித்த ஸ்ரீவர்தனா

அடுத்து குசால் மெண்டில் ஜோடி சேர்ந்தார். குணதிலகா 19 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் ஸ்டம்பிங் ஆகி ஆட்டம் இழந்தார். மெண்டிஸ் 19 ரன்னில் சாஹல் பந்தில் எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் தரங்காவை 9 ரன்னில் பாண்டியா வெளியேற்றினார். மேத்யூஸ் 20 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் பட்டேல் பந்தில் வெளியேற இலங்கை அணி 121 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.


விக்கெட் வீழ்த்தி சந்தோசத்தில் சாஹல்

6-வது விக்கெட்டுக்கு ஸ்ரீவர்தனா உடன் கபுகேதரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்க முயற்சி செய்தது. ஸ்ரீவர்தனா அதிரடியாக விளையாடி 58 பந்தில் 58 ரன்கள் சேர்த்து பும்ப்ரா பந்தில் ஆட்டம் இழந்தார். கபுகேதரா 40 ரன்கள் எடுத்து பும்ப்ரா பந்தில் க்ளீன் போல்டானார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது.


40 ரன்கள் எடுத்த கபுகேதரா

இருவரின் ஆட்டத்தால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் பும்ப்ரா 10 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டு கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com