நீலகிரி மாவட்டத்தில் 28.100 கி.கி பிளாஸ்டிக் பறிமுதல் - கலெக்டர் நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.74,600 அபராதம் விதித்தனர்.
நீலகிரி கலெக்டர்
நீலகிரி கலெக்டர்
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள்,11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது மற்றும் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வினை வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு ஒட்டு மொத்த கள ஆய்வு மண்டல அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக ஊட்டி, குன்னூர், கூடலூர், மற்றும் கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துணை கலெக்டர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து, மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினர் ஆய்வின் போது, தடை செய்யப்பட்ட, 28.100கி.கி எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதத் தொகையாக ரூ.74,600 வசூல் செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும்,சுற்றுலா மற்றும் வெளியூர் பயணிகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்த்து நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலை பாதுகாத்திட வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com