நாகலாந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 281 கம்பெனி துணை ராணுவப்படை

நாகலாந்து சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 281 கம்பெனி துணை ராணுவப் படையினர் வர இருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாகலாந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 281 கம்பெனி துணை ராணுவப்படை
Published on

கொஹிமா:

நாகலாந்து சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 27-ந் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு பணிக்கு 77 கம்பெனி துணை ராணுவ படையினர் ஏற்கனவே வருகை தந்தனர். அவர்கள் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேலும், 281 கம்பெனி துணை இராணுவ படையினர் வரவிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி அபிஜித் சின்கா கூறியுள்ளார். வாகனங்களில் பணம், ஆயுதம் மற்றும் மதுபானங்களை சட்டவிரோதமாக கடத்தி செல்கிறார்களா? என்று துணை ராணுவ படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், திரிபுராவில் சட்டபேரவை தேர்தல் பிப்ரவரி 18-ந்தேதி முடிவடைந்த பின்னர், அம்மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 204 கம்பெனி துணை இராணுவ படையினர் நாகலாந்துக்கு வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com