உ.பி.யில் மழை தொடர்பான விபத்தில் 28 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உப 28 பேர் பலியாகி உள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யில் பெய்த மழை
உ.பி.யில் பெய்த மழை
Published on

லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை நேற்று முதல் பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உ.பி.யில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 28 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

இதில், சீதாபூர், லக்கிம்பூரில் தலா 6 பேர், ஜான்பூர், பாரபங்கியில் தலா 3 பேர், சோன்பத்ராவில் 2 பேர், வாரணாசி, கோரக்பூர், சித்தார்த் நகர், அயோத்தியா, சாண்ட்லி, கான்பூர் டேஹட், மிர்சாபூர், பல்ராம்பூரில் தலா ஒருவர் என மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com