சிம்லா பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு: சோனியா இரங்கல்

இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் சிம்லா அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் இறந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிம்லா பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு: சோனியா இரங்கல்
Published on

சிம்லா:

இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் கின்னார் பகுதியில் இருந்து சோலன் பகுதியை நோக்கி இன்று காலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஏராளமானோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

ராம்புர் அருகே வரும்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்து சென்றனர். பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 9 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, சிம்லாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இமாசலப்பிரதேச மாநில கவர்னர் ஆசார்ய தேவ் மற்றும் முதல்-மந்திரி வீரபத்ர சிங் ஆகியோரும் விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com