நெல்லூர் அருகே சர்வதேச செம்மரக்கடத்தல்காரர்கள் 27 பேர் கைது

நெல்லூர் அருகே சர்வதேச செம்மரக்கடத்தல்காரர்கள் 27 பேரை போலீசார் விரட்டிச்சென்று கைது செய்தனர். கைதானவர்கள் மீது அதிரடிப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லூர் அருகே சர்வதேச செம்மரக்கடத்தல்காரர்கள் 27 பேர் கைது
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் துத்தலூரு மண்டலம் காவலி அருகே வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அந்தக் கும்பல், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் விரட்டிச்சென்று 27 பேரை பிடித்தனர்.

பிடிபட்டவர்கள் துத்தலூரு மற்றும் காவலியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அனைவரும் சர்வதேச கடத்தல்காரர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 27 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 வாகனங்கள், 25 செல்போன்கள், 50 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.

கைதானவர்கள் மீது அதிரடிப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com