கும்பகோணம் அருகே ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்ட 27 குழந்தைகள் மீட்பு

கும்பகோணம் அருகே ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்ட 27 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
கும்பகோணம் அருகே ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்ட 27 குழந்தைகள் மீட்பு
Published on

தஞ்சாவூர்:

கும்பகோணம் அருகே உள்ள மருதாநல்லூரில் யு.ஆர்.குடில் என்கிற சிவசக்தி ஆசிரமம் செயல்பட்டு வந்தது. இங்கு 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 27 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இவர்களில் 6 பேர் ஆண்கள். 21 பேர் பெண்கள் ஆவார்கள். இந்த ஆசிரமம் இளைஞர் நீதி சட்டம், குழந்தைகள் நல குழுமம் ஆகியவற்றில் பதிவு செய்யப்படாமல் செயல் பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சரஸ்வதி, உறுப்பினர்கள் ராமமூர்த்தி, பழனியப்பன், நிஜாத் அப்ஜாத், தாசில்தார் கார்த்திகேயன், திருவிடைமருதூர் டி.எஸ்.பி. வெங்கடேசன் ஆகியோர் இன்று ஆசிரமத்திற்கு சென்றனர்.

அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த குழந்தைகள் 27 பேரையும் தஞ்சைக்கு அழைத்து வந்தனர். இங்குள்ள சிறுவர் அரசு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com