மராட்டியம்: மது போதையில் குடிமகன் வைத்த தீ - 27 பைக்குகள், 1 லோடு ஆட்டோ எரிந்து நாசம்

மராட்டிய மாநிலத்தில் குடிபோதையிலிருந்த நபர் ஒருவர் வைத்த தீயில் சிக்கி 27 பைக்குகள் மற்றும் 1 லோடு ஆட்டோ ஆகியன முற்றிலும் எரிந்து நாசமாகியது.
மராட்டியம்: மது போதையில் குடிமகன் வைத்த தீ - 27 பைக்குகள், 1 லோடு ஆட்டோ எரிந்து நாசம்
Published on

மும்பை:

மராட்டிய மாநிலத்தில் குடிபோதையிலிருந்த நபர் ஒருவர் வைத்த தீயில் சிக்கி 27 பைக்குகள் மற்றும் 1 லோடு ஆட்டோ ஆகியன முற்றிலும் எரிந்து நாசமாகியது.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ஜனதா வசந்த் என்ற குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலையில் நின்று கொண்டிருந்த பைக்குகளில் ஒரு பைக் மட்டும் தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து, தீ மளமளவென்று அனைத்து பைக்குகளுக்கும் பரவியது. குடியிருப்பு வாசிகள் வந்து தீயை அணைப்பதற்குள் 27 பைக்குகள், 2 சைக்கிள்கள் மற்றும் 1 லோடு ஆட்டோ எரிந்து நாசமாகியது.

இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் நிலேஷ் பாடீல் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தான் குடி போதையில் ஒரே ஒரு பைக்குக்கு தீ வைத்ததாக ஒத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி போலீசார் சிறையிலடைத்தனர்.

விபத்து நடந்த இந்த பகுதியில் தனக்கு யாரேனும் விரோதி என்றால் அவரது வாகனத்தை கொளுத்தும் நல்ல பழக்கம் வழக்கமான ஒன்றாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015-ம் ஆண்டு இதே போல் நடந்த ஒரு விபத்தில் 85 பைக்குகள் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com