மாநகர பஸ்களை இயக்க 250 தற்காலிக டிரைவர்-கண்டக்டர்கள்

சென்னையில் மாநகர பஸ்களை இயக்க 250 தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநகர பஸ்களை இயக்க 250 தற்காலிக டிரைவர்-கண்டக்டர்கள்
Published on

சென்னை:

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலைக்கு வராததால் பஸ்கள் அனைத்தும் டெப்போக்களில் முடங்கிக் கிடக்கின்றன.

10 சதவீத ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு வந்ததால் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

அரசு பஸ்களை இயக்க தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் டிரைவர்கள், கண்டக்டர்களை தேர்வு செய்யுமாறு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டது. இதற்கான அறிவிப்பை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்டார்.

தகுதி, திறமை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதையடுத்து கனரக வாகன ஓட்டுனர்களுக்கான லைசென்ஸ் வைத்திருக்கும் டிரைவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள போக்குவரத்து கழக டெப்போக்களை அணுகினார்கள்.

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அவர்களது லைசென்ஸ் மற்றும் வாகனம் ஓட்டும் தகுதி ஆகியவற்றை சோதனை செய்தனர். அதன்பிறகு அவர்களுக்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டது.

இதே போல் கண்டக்டர் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டது. சென்னையில் இன்று காலையில் மாநகர பஸ்களை இயக்க 250 தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் உடனடியாக மாநகர பஸ்கள் இயக்க அனுமதிக்கப்பட்டனர். முக்கியமான வழித்தடங்களில் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. அவர்களுக்கு வழித்தடங்கள் சரியாக தெரியாததால் சிரமம் ஏற்பட்டது.

மாநகர பஸ்களில் நேற்று குறைவான பயணிகளே பயணம் செய்தனர். இன்று தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதால் அவைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com