டெல்லி அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வயிற்று வலி- மருத்துவமனையில் அனுமதி

டெல்லியில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வயிற்று வலி- மருத்துவமனையில் அனுமதி
Published on

புதுடெல்லி:

டெல்லியன் நரேலா பகுதியில் அரசுப் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் இன்று மதியம் மாணவர்களுக்கு வழக்கம்போல் உணவு பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஒருவர் பின் ஒருவராக வயிற்று வலியால் துடித்தனர்.

இவ்வாறு உடல்நலம் பாதிக்கப்பட்ட 25 மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மூத்த டாக்டர் தெரிவித்தார். உணவில் ஏதாவது விஷ பூச்சி விழுந்திருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று கடந்த சனிக்கிழமை டெல்லி கிச்ரிபூரில் உள்ள அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 2 மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். #DelhiMiddayMeal

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com