உலக முட்டை தினம்: தானே-பல்காரில் 2.5 லட்சம் குழந்தைகளுக்கு முட்டை விநியோகம்

உலக முட்டை தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மற்றும் பல்கார் மாவட்டங்களில் 2.5 லட்சம் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்பட்டது.
உலக முட்டை தினம்: தானே-பல்காரில் 2.5 லட்சம் குழந்தைகளுக்கு முட்டை விநியோகம்
Published on

உலக முட்டை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முட்டைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மனித ஆரோக்கியத்துக்கு முட்டையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் பேரணிகள், கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் தானே மற்றும் பல்கார் மாவட்டங்களில் உலக முட்டை தினத்தை முன்னிட்டு அங்கன்வாடிகள், பால்வாடிகள், அரசு உதவி பெறும் மற்றும் உதவி பெறாத பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அவித்த முட்டை பரிமாறப்பட்டது. சைவம் மட்டுமே சாப்பிடும் குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை.

தானே மாவட்டத்தில் 1 லட்சம் குழந்தைகளுக்கும், பல்கார் மாவட்டத்தில் 1.5 லட்சம் குழந்தைகளுக்கும் முட்டை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com