சத்தீஷ்கரில் புளுவேல் விளையாட்டு: 24 வயது பெண் மீட்பு

சத்தீஷ்கர் மாநிலத்தில் புளுவேல் படம் வரைந்து இருந்த 24 வயது இளம் பெண் மீட்கப்பட்டார்.
சத்தீஷ்கரில் புளுவேல் விளையாட்டு: 24 வயது பெண் மீட்பு
Published on

ராய்ப்பூர்:

சத்தீஷ்கர் மாநிலம் காஷ்பூர் மாவட்டத்தில் 24 வயது பெண் ஒருவர் புளுவேல் விளையாட்டில் ஈடுபட்டு இருந்தார். திமிங்கலம் படத்தை கையில் கீறி வரைந்து இருந்தார். இதை கண்டுபிடித்த பெற்றோர் போலீசார் உதவியுடன் அவரை ‘புளுவேல்’ விளையாட்டில் இருந்து மீட்டனர். அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் அளித்து பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

மாணவர்கள் புளுவேல் விளையாட்டில் ஈடுபடாமல் தடுக்க போலீசார் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது பலோட் மாவட்டத்தில் சில மாணவர்களின் கையில் சிராய்ப்பு காயங்கள் இருந்தது. அது புளுவேல் சின்னமா என போலீசார் விசாரித்தனர். ஆனால் மாணவர்கள் தாங்கள் புளுவேல் விளையாட்டில் ஈடுபடவில்லை என்று மறுத்தனர்.

தன்டேவடாவில் அரசு பள்ளி மாணவர்கள் 14 பேர் கையிலும் இதுபோல் சிராய்ப்பு காயம் இருந்தது. அவர்களும் நாங்கள் ‘புளூவேல்’ விளையாட்டில் ஈடுபடவில்லையென்று மறுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com