பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும் அமர்நாத்தில் இதுவரை 2.23 லட்சம் யாத்ரீகர்கள் தரிசனம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அமர்நாத்தில் இருக்கும் பனி லிங்கத்தை 21 நாட்களில் இதுவரை 2.23 லட்சம் யாத்ரீகர்கள் தரிசித்துள்ளனர்.
பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும் அமர்நாத்தில் இதுவரை 2.23 லட்சம் யாத்ரீகர்கள் தரிசனம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அமர்நாத்தில் இருக்கும் பனி லிங்கத்தை 21 நாட்களில் இதுவரை 2.23 லட்சம் யாத்ரீகர்கள் தரிசித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

யாத்திரையின் 12-வது நாளின் போது அனந்தநாக் மாவட்டத்தின் வழியாக வந்த யாத்ரீகர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பின்னர் எந்த பிரச்சனையும் இல்லாமல் யாத்திரை சென்று வருகின்றனர். 21-வது நாளான இன்று 6064 பேர் தரிசனம் செய்துள்ளனர். இதுவரை, மொத்தம் 2,22,619 யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com