21-ம் நூற்றாண்டு அமைதி நூற்றாண்டாக கொண்டாடப்பட வேண்டும் - தலாய் லாமா விருப்பம்

அணு ஆயுதங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வீழ்த்தப்பட்டு 21-ம் நூற்றாண்டு அமைதிக்கான நூற்றாண்டாக கொண்டாடப்பட வேண்டும் என தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார். #DalaiLama
21-ம் நூற்றாண்டு அமைதி நூற்றாண்டாக கொண்டாடப்பட வேண்டும் - தலாய் லாமா விருப்பம்
Published on

லக்னோ:

நாடுகடந்து வாழ்ந்துவரும் திபெத்திய மக்களின் ஆன்மிக தலைவர் தலாய் லாமா உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி நகரில் இன்று நடைபெற்ற இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் 92-ம் ஆண்டு விழா மற்றும் துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் நாடு முழுவதிலும் உள்ள சுமார் 150 பல்கலைக்கழகங்களை சேர்ந்த துணை வேந்தர்களும், கல்வி நிறுவன அதிபர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய தலாய் லாமா, அணு ஆயுதங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வீழ்த்தப்பட்டு 21-ம் நூற்றாண்டு அமைதிக்கான நூற்றாண்டாக கொண்டாடப்பட வேண்டும் என தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார்.

அணு ஆயுதங்களால் மனிதகுலத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், உலகளாவிய அளவில் அணு ஆயுதங்களை சேமிக்க தற்போது எழுந்துள்ள போட்டி இந்த பூமியில் மனிதகுலத்தை அழித்தொழிப்பதற்கான அஸ்திவாரத்தை அமைத்துள்ளது. இதேநிலை நீடித்தால் அதன்விளைவு இடண்டாம் உலகப்போர் காலத்தில் ஏற்பட்ட பின்விளைவை விட மோசமானதாக அமைந்துவிடும்.

எனவே, இன்னும் இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குள் அணு ஆயுதங்களை அழித்துவிட வேண்டும். அணு ஆயுதங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வீழ்த்தப்பட்டு 21-ம் நூற்றாண்டு அமைதிக்கான நூற்றாண்டாக கொண்டாடப்பட வேண்டும். 

வெப்பநிலை அதிகரிக்கவும், குடிநீர் பற்றாக்குறை உயர்ந்து வருவதற்கும் குவித்து வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் காரணமாக உள்ளது. அறிவியல் வளர்ச்சியும், தொழில்நுட்ப புரட்சியும் உலக நாடுகளின் பொருளாதர எல்லைகளை அகற்றியுள்ளன.

உலகின் புதிய பிரச்சனைகளை எதிர்கொள்ள பழமைமிக்க பாரம்பரிய கல்விமுறையும், நவீனகால கல்விமுறையும் ஒன்றாக கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். #tamilnews #DalaiLama

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com