2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி 21 பேரை கொன்றது - பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் இந்த ஆண்டு இதுவரை 2,050 முறை சண்டை நிறுத்தத்தை மீறி நடத்தி உள்ள தாக்குதல்களில் 21 இந்தியர்கள் பலியாகி உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டி உள்ளார்.
பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
Published on

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதிகளில், 2003-ம் ஆண்டு போடப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடாவடி தாக்குதலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் வழக்கமாக்கி கொண்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தான் 2,050 முறை சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல்கள் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல்களில் 21 இந்தியர்கள் பலியாகி உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், “இந்திய படைகள் அதிகபட்ச கட்டுப்பாட்டை கொண்டுள்ளன. அத்துமீறிய தாக்குதல்களுக்கும், பயங்கரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவ முயற்சிப்பதற்கும் அவை பதிலடி கொடுக்கின்றன” எனவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com