ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - சமீர் வர்மா அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

பிரான்சில் நடைபெற்று வரும் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் சமீர் வர்மா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். #OrleansMastersSuper100 #SameerVerma #ParupalliKashyap
ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - சமீர் வர்மா அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் கடந்த 27-ம் தேதி தொடங்கி நாளை (ஏப்ரல் 1-ம் தேதி) வரை நடைபெற உள்ளது.

நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா, பிரான்சின் லூகாஸ் கோர்வேவை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை பிரான்ஸ் வீரர் 21-17 என கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை சமீர் வர்மா 21-19 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறிவிறுப்பு அதிகரித்தது.

வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை சமீர் வர்மா 21-15 என கைப்பற்றினார். இதன்மூலம் 17-21, 21-19, 21-15 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற சமீர் வர்மா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com