

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பாருபள்ளி காசியப், அயர்லாந்தின் ஜோஷுவா மேகீ உடன் மோதினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய காஷ்யப் முதல் செட்டை 21-11 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காஷ்யப் இரண்டாவது செட்டையும் 21-14 என கைப்பற்றினார்.
இதன்மூலம் 21-11, 21-14 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற காஷ்யப் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவர் இன்று நடைபெற உள்ள காலிறுதி சுற்று ஆட்டத்தில் டென்மார்க்கின் ஈடு ஹெய்னோவை எதிர்கொள்ள இருக்கிறார்.