2016 வி.ஏ.ஓ. தேர்வில் முறைகேடு - இருவர் கைது

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக 2 வி.ஏ.ஓ. க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
கைது
Published on

சென்னை:

டி.என்.பி.எஸ்.சி, குரூப்-4, குரூப்-2 ஏ ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர் சேட் தலைமையில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்ட நாளில் இருந்து தினமும் குற்றவாளிகளின் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த விஏஓ பன்னீர்செல்வம், சென்னையைச் சேர்ந்த விஏஓ செந்தில் ராஜ்  என்ற கபிலன் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு இளையான்குடி மையத்தில் நடைபெற்ற விஏஓ தேர்வில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அவர்கள் இருவரும் இடைதரகர் ஜெயக்குமாரிடம் தலா ரூ.7 லட்சம் கொடுத்து முறைகேடு செய்து தேர்வில் தேர்ச்சி செய்திருப்பது சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்து முடிந்த குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் மூளையாகச் செயல்பட்ட ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். தற்போது ஜெயக்குமார் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்விலும் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com