நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை ஒத்திவைப்பு - டெல்லி கோர்ட்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மீண்டும் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள்
Published on

புதுடெல்லி:

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி குற்றவாளிகள் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவைடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை மீண்டும் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ்  நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com