காஷ்மீருக்குள் ஊடுருவ எல்லையில் காத்திருக்கும் 200 பாக். பயங்கரவாதிகள்

காஷ்மீருக்குள் ஊடுருவும் வகையில் சர்வதேச எல்லைப்பகுதிகளில் சுமார் 200 பயங்கரவாதிகள் தயார் நிலையில் காத்திருப்பது தெரிய வந்துள்ளது.
பயங்கரவாதிகள்
பயங்கரவாதிகள்
Published on

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த 370-வது சட்டப்பிரிவு வழங்கும் சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் 5-ந்தேதி மத்திய அரசு ரத்து செய்தது.

இதனால் கடந்த 40 நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்றாலும் காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

காஷ்மீரில் மாநில அந்தஸ்தையே மத்திய அரசு முடக்கி விட்டதால், பிரிவினைவாதிகளின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. பயங்கரவாதிகள் அங்கு தொடர்ந்து உரிமை கொண்டாட முடியாத நிலையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

இதனால் காஷ்மீர் பிரச்சினையை வைத்து குளிர்காய்ந்து வந்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். காஷ்மீருக்குள் அதிகமாக ஊடுருவி தாக்குதல் சம்பவங்களை நடத்த தீவிரமாக உள்ளனர்.

பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் சமீப காலமாக அதிக அளவில் காஷ்மீருக்குள் ஊடுருவி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்டு 5-ந்தேதிக்கு பிறகு பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

ஆகஸ்டு 5-ந்தேதிக்கு பிறகு மட்டும் இதுவரை சுமார் 50 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் லஷ்கர்- இ-தொய்பா, ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத இயக்கங்களின் தற்கொலைப்படை பிரிவைச் சேர்ந்தவர்கள்.

எனவே தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டு அவர்கள் ஊடுருவி இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காஷ்மீருக்குள் ஊடுருவும் வகையில் சர்வதேச எல்லை பகுதிகளில் சுமார் 200 பயங்கரவாதிகள் தயார் நிலையில் காத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பாலகோட் பயங்கரவாத முகாமை குண்டுகள் வீசி அழித்த பிறகு எல்லையில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தது.

அவன் எல்லை பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளான். அவனது உத்தரவின் பேரில் பயங்கரவாதிகளை அதிக அளவில் காஷ்மீருக்குள் அனுப்பும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com