அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஹார்வே புயல்: 200 இந்திய மாணவர்கள் கழுத்து அளவு நீரில் சிக்கி தவிப்பு

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹூஸ்டன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. அதனால், அங்கு படித்து வரும் சுமார் 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறார்கள்.
அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஹார்வே புயல்: 200 இந்திய மாணவர்கள் கழுத்து அளவு நீரில் சிக்கி தவிப்பு
Published on

‘ஹார்வே’ என்ற புயல், அமெரிக்காவை தாக்கி உள்ளது. இதனால் பேய் மழை பெய்து, டெக்சாஸ் மாகாணம் வெள்ளத்தில் மிதக்கிறது. ஏராளமான உயிர்ச்சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹூஸ்டன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. அதனால், அங்கு படித்து வரும் சுமார் 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருப்பதாக அந்நகரில் உள்ள இந்திய துணைத்தூதர் அனுபம் ரே எனக்கு தகவல் அனுப்பி உள்ளார். இந்திய மாணவர்கள், கழுத்து அளவு தண்ணீரால் சூழப்பட்டுள்ளனர். ஷாலினி, நிகில் பாட்டியா என்ற 2 மாணவர்கள், ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ இந்திய துணைத்தூதர் விரைந்துள்ளார். அவர்களுடைய குடும்பத்தினரை வரவழைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

இந்திய தரப்பில், மாணவர்களுக்கு உணவு வினியோகிக்க முன்வந்தபோதிலும், மீட்பு பணிகளுக்கு படகுகளின் தேவை இருப்பதால், அதற்கு அமெரிக்க கடலோர காவல்படை அனுமதி அளிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com