தர்மபுரி அருகே லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

தர்மபுரி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் செல்லியம்பட்டியில் 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் நேற்று இரவு 8 மணியளவில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த வாலிபர்கள் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், ஒருவர் பெயர் விக்னேஷ் என்றும், மற்றொருவர் பெயர் தினேஷ்குமார் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com