திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் 2 வாலிபர்கள் பலி

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து (கோப்பு படம்)
விபத்து (கோப்பு படம்)
Published on

கொடைரோடு:

திண்டுக்கல் அருகில் உள்ள கரிசல்பட்டியை சேர்ந்தவர் சவரியார்(வயது30). கூலித்தொழிலாளி. திண்டுக்கல் அருகே ஜல்லிப்பட்டியை சேர்ந்த ஜானு என்ற செபஸ்டின்செனாய்(28). கேரளாவில் வேலை பார்த்து வந்தார்.

இவரது நண்பர் ராஜேஸ்(32). நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஜல்லிப்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவிற்காக நேற்று வந்தனர். பின்னர் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் கொடைரோடு வந்து மது அருந்திவிட்டு மேலும் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு பைக்கில் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

ஜல்லிப்பட்டி பிரிவில் சென்றபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் தடுப்பில் மோதி 50 மீட்டர் தூரத்திற்கு அப்பால் விழுந்தது. இதில் பைக்கில் சென்ற 3 வாலிபர்களும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். சவரியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து செபஸ்டின் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com