குடியாத்தம் அருகே வி‌ஷ வாயு தாக்கி 2 பேர் மயக்கம்

குடியாத்தம் அருகே குடிநீர் தொட்டி சுத்தம் செய்த போது வி‌ஷ வாயு தாக்கி 2 பேர் மயங்கி விழுந்தனர்.
குடியாத்தம் அருகே வி‌ஷ வாயு தாக்கி 2 பேர் மயக்கம்
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் சச்சின் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் தங்கம் நகர் 1-வது தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில் உள்ள 15 அடி ஆழ தரை தள குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்வதற்காக வேலைக்கு சென்றனர்.

கடந்த 2 நாட்களாக வேலை பார்த்து வந்த நிலையில் இன்று வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது தொட்டியை சுத்தம் செய்ய கெமிக்கல் ரசாயனத்தை பயன்படுத்தினர்.

அந்த ரசாயனத்தில் இருந்து வெளியேறிய வி‌ஷ வாயுவினால் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை கண்ட நடராஜன் குடியாத்தம் தீயணைப்பு துறைக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தொட்டியில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

போலீசார் அவர்களை குடியாத்தம் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com