கொல்லங்கோடு அருகே தொழிலாளியிடம் பணம் பறிப்பு- 2 பேர் கைது

கொல்லங்கோடு அருகே கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

நாகர்கோவில்:

கொல்லங்கோடு நங்கையத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 32) தொழிலாளி. இவர் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக ஊரம்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 பேர் வந்தனர். அவர்கள் சசிகுமாரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டனர். ஆனால் அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறினார்.

இதில் ஆத்திரமடைந்த அவர்கள் சசிகுமாரை கத்தியை காட்டி மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்து ரூ.700-ஐ பறித்தனர். இதனைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் அங்கிருந்து 2 பேரும் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது சூழால் பகுதியை சேர்ந்த ஜெயசிங் (47), அஜிஸ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com