நாமக்கல்லில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பெண்கள் கைது

நாமக்கல்லில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் நேற்று முல்லைநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 2 பெண்களை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையை சேர்ந்த அழகரசன் மனைவி கோகிலா (வயது 36), கணேசபுரம் முதல் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி நதியா (35) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் ரூ.130-ஐ பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களில் 89 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுபோன்ற சட்டவிரோத செயல் களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com